×

கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே தேவை இல்லாமல் வர வேண்டாம்: மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்..!!

சென்னை: வெப்பம் அதிகரித்து வருவதால் சென்னை மக்கள் வெளியே தேவை இல்லாமல் வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. பகல் நேரங்களில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வியர்வை மழையில் நனைந்தபடியே கொளுத்தும் வெயிலில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி பகலில் அதிகரித்து காணப்படும் வெயிலால் இரவு நேரத்திலும் புழுக்கம் அதிகரித்து அனல் காற்று வீசுகிறது. அதிலும், அக்னி நட்சத்திரம் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரையில் வெயில் வாட்டி வதைக்கும்.

இந்நிலையில் கடும் வெயில் காரணமாக பொதுமக்களுக்கு சென்னை மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவுறுத்தியுள்ளது. அதில், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம். வெப்பம் அதிகரித்து வருவதால் சென்னை மக்கள் வெளியே தேவை இல்லாமல் வர வேண்டாம். மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். நீர்ச்சத்துள்ள பழங்கள், கம்மங்கூழ், ராகிக்கூழ், கரும்புச்சாறு, இளநீர் பருகுவது நன்று. ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

 

 

The post கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே தேவை இல்லாமல் வர வேண்டாம்: மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,administration ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...